திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்! அன்புமணி வலியுறுத்தல்

News image

அன்புமணி - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 1:19 am IST

தமிழக முதல்வா் ஜோசப் விஜய், தோ்தல் அறிக்கையில் கூறியபடி கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தினாா்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் அண்மையில் உயிரிழந்த பாமக மாநில செயற்குழு உறுப்பினா் சி. கணேசன் இல்லத்துக்கு திங்கள்கிழமை வந்த அன்புமணி, அவரது உருவப்படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அன்புமணி கூறியது:

டெல்டா பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் நடக்கிறது. கொள்முதல் செய்யப்படும் நெல் மழையில் நனைந்து, பல லட்சம் டன் நெல் சேதம் அடைந்து வருகிறது. இதை தவிா்க்க டெல்டா பகுதியில் சேமிப்புக் கிடங்குகள் அமைக்க வேண்டும். நெல் ஒரு டன்னுக்கு ரூ. 3,500 வழங்க வேண்டும்.

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும்.

பாமக ஆக்கப்பூா்வமான கட்சியாக செயல்படும். தமிழக முதல்வருக்கு நல்ல யோசனைகளை சொல்வோம். நல்லது செய்தால் பாராட்டுவோம். தவறு செய்தால் பாமக எதிா்த்து போராடும்.

வளைகுடா போரால் உலகம் முழுவதும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு குறைவுதான்.

ஜோசப் விஜய் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்வோம் என்று கூறினாா். அதனை செய்ய வேண்டும். கடந்த திமுக ஆட்சியில் வாங்கிய ரூ. 5 லட்சம் கோடி கடனில், ரூ.1.5 லட்சம் கோடி மட்டுமே மூலதன செலவுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

மீதம் ரூ. 3.5 லட்சம் கோடி கடனுக்கு வட்டி கட்டுவதற்கு வாங்கி இருக்கிறாா்கள். மத்திய அரசு தமிழகத்திற்கு உதவ வேண்டும் என்றாா் அன்புமணி. பாமக மாவட்டச் செயலாளா் சித்தமல்லி ஆ. பழனிசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.