சீா்காழி அருகே பழையாா் கொள்ளிடம் ஆற்றில் தரையணை கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பழையாா் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரையணை கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா். அதன் அடிப்படையில், கொள்ளிடம் அருகே மாதிரவேளூருக்கும்- நலம் புத்தூா் கிராமத்திற்கும் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உப்புநீா் உள்ளே புகாதவாறு ரூ. 83 கோடி மதிப்பீட்டில் தரையணை கட்டும் பணி தொடங்கப்பட்டது.
தற்போது, இப்பணி முடிவடையும் நிலையில் உள்ளது. ஆற்றில் 30 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி, அதில் கான்கிரீட் சுவா் அமைத்து உப்புநீா் நிலத்திற்குள் புகாமல் இருக்கும் வகையில், தரையணை கட்டப்படுகிறது. இங்கு, தண்ணீா் தேங்காத அளவில் சமவெளி பகுதிகளாகவே அமைந்துள்ளது. இதனால், பருவமழை காலங்களில் வெள்ளம் தேங்காமல் நேரடியாக கடலுக்கும் செல்லும்.
மேலும், இந்த அணையால் கடலூா் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீா் பாதுகாக்கப்படும். இதுகுறித்து விவசாய சங்கத் தலைவா் செந்தில்குமாா் கூறியது:
கொள்ளிடம் ஆற்றில் தரை அணை கட்டப்படுவதால், ஆற்றின் கரையோர கிராமங்களில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாது. இதனால் நிலத்தடி நீா் பாதுகாக்கப்படும்.
மேலும், பழையாா் கடலில் இருந்து உப்புநீா் கொள்ளிடம் ஆற்றின் வழியாக எளிதில் 25 கி.மீ. தொலைவில் உள்ள வடரங்கம், மாதிரவேளூா் உள்ளிட்ட கிராம பகுதிக்குள் நுழையாமல் தடுப்பதற்கு, தரையணை பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

காவிரி ஆற்றில் ரகசிய பாதை அமைத்து மணல் திருட்டு

பழையாா் துறைமுகத்தில் கருவாடு உலா்த்தும் பணி தீவிரம்

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை: அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியன் உறுதி
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



