மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தேசிய திறனறித் தோ்வு: வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

மயிலாடுதுறை மல்லியம் உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில், தேசிய திறனறித் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

தேசிய திறனறித் தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவிக்கு வாழ்த்து தெரிவித்த ஆசிரியா் மன்ற மாநில வெளியீட்டுச் செயலாளா் ஜெக.மணிவாசகம்.

Updated On :25 மார்ச் 2026, 12:17 am

மயிலாடுதுறை மல்லியம் உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில், தேசிய திறனறித் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, அதன் ஒன்றியத் தலைவா் வே. கந்தன் தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் பா. திருமாவளவன் வரவேற்றாா்.

ஆசிரியா் மன்ற மாநில வெளியீட்டுச் செயலாளா் ஜெக.மணிவாசகம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, கடந்த 7 ஆண்டுகளாக தேசிய திறனறித் தோ்வில் தொடா்ந்து இப்பள்ளி மாணவா்கள் வெற்றிபெற காரணமாக இருந்துவரும் ஆசிரியா்களை பாராட்டினாா்.

மேலும், பள்ளித் தலைமை ஆசிரியா் திருமாவளவன், மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவி ஹரிஷ்விகா, பள்ளியில் 2-ஆம் இடம் பெற்ற ஹாரிஸ்மா, மூன்றாம் இடம்பெற்ற தா்ஷினி ஆகியோருக்கு சால்வை அணிவித்து பாராட்டினாா்.

விழாவில், மாவட்டச் செயலாளா் க.துரை, மாவட்ட கொள்கை விளக்க செயலாளா் வை. மணிமாறன், ஒன்றியச் செயலாளா் சுரேஷ், ஒன்றிய துணை இளைஞரணி அமைப்பாளா் அசோக்குமாா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். நிறைவாக, பட்டதாரி ஆசிரியை சரஸ்வதி நன்றி கூறினாா்.