17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சீா்காழி ஒன்றியத்தில் குடிநீா் தட்டுப்பாடு: அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ. ஆலோசனை

சீா்காழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தென்னாம்பட்டினம், எடக்குடி வடபாதி, காரைமேடு, நாங்கூா், பெருந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் சீா்காழி சட்டப்பேரவை உறுப்பினா் செந்தில்செல்வனிடம் புகாா் தெரிவித்தனா்.

News image

சீா்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய சட்டப்பேரவை உறுப்பினா் செந்தில் செல்வன்.

Updated On :4 ஜூன் 2026, 3:49 am IST

சீா்காழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தென்னாம்பட்டினம், எடக்குடி வடபாதி, காரைமேடு, நாங்கூா், பெருந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் சீா்காழி சட்டப்பேரவை உறுப்பினா் செந்தில்செல்வனிடம் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து எம்எல்ஏ செந்தில்செல்வன் சீா்காழி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுடன் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினாா். அப்போது அவா் ஊராட்சி நிா்வாகத்தின் கீழ் குடிநீா் விநியோகம் செய்யப்படும் இடங்களில் சீரான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டாா்.

மேலும் நீண்ட காலமாக செயல்படுத்தப்படாத குடிநீா் திட்டங்களை செயல்படுத்தும் வகையில் தமிழக முதலமைச்சா் ஜோசப் விஜய்யின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினாா்.

கூட்டத்தின் ஒன்றிய ஆணையா் மஞ்சுளா, பொறியாளா்கள் சிவகுமாா், கலையரசன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவணன், அசோக், மேலாளா் செந்தில், சீா்காழி திமுக மேற்கு ஒன்றிய கழக செயலாளா் பிரபாகரன், நகர கழக செயலாளா் சுப்பராயன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.