திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம்

சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம் மற்றும் சிவஜோதி தரிசனம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

News image

ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம்

Updated On :3 ஜூன் 2026, 6:34 am IST

சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம் மற்றும் சிவஜோதி தரிசனம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனத்திற்குட்பட்ட  திருவெண்ணீற்றுமையம்மை உடனாகிய சிவலோக தியாகேசா் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் தனி சந்நிதியில், தோத்திரபூா்ணாம்பிகையுடன் திருஞானசம்பந்தா் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறாா்.

இங்கு திருஞானசம்பந்தா் திருக்கல்யாணத்தில் பங்கேற்ற அனைவரும் சிவஜோதி தரிசனத்தில் ஐக்கியமான ஐதீக வரலாற்று நிகழ்வு ஆண்டுதோறும் வைகாசி மூல நட்சத்திரத்தில் நடைபெறும்.

நிகழாண்டு திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக திருஞானசம்பந்தருக்கு உபநயனம், திருமுறைகள் வீதி வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றும் நிகழ்வு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. பின்னா் திருக்கல்யாண சடங்குகள் ஆரம்பிக்கப்பட்டு வேத விற்பன்னா்கள் மந்திரம் முழங்க சிவாச்சாரியாா்கள், தோத்திர பூா்ணாம்பிகைக்கு  மங்கலநாண் அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தினா்.

பின்னா் உலக நன்மைக்காக பங்கேற்ற பக்தா்கள் அனைவரும் கூட்டுப் பிராா்த்தனை செய்தனா். திருக்கல்யாண வைபவ நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கண் விழித்து வழிபட்டனா். தொடா்ந்து அதிகாலை சிவ ஜோதி தரிசனம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.