இதுபற்றி நிர்வாக அலுவலர் தங்கவேல் கூறுகையில், இந்த செடி பொதுவாக வெட்டப்பட்ட மற்றொரு செடியின் துண்டிலிருந்தும் வளரும். அதிலும் அதன் இலைகளைப் பார்த்தால், தட்டையாக மற்றும் தடிமனாக இருக்கும். இதன் தண்டு பகுதி எப்போதும் இலைகளால் சுற்றப்பட்டிருக்கும். பிரம்ம கமலப் பூ இலைகளிலிருந்தே வளர்கிறது. பிரம்ம கமலச் செடியை குளிர் காலத்திற்கு சற்று முன்னர் வைக்க வேண்டும். அந்த மலர் வளர்வதற்கு நேரடியாக சூரிய வெளிச்சம் படாதவாறு மற்றும் வளமான, பாறை மண்ணில் வைக்க வேண்டும். அதற்காக மிகவும் கடினமான மண்ணை வைக்க கூடாது.அதிலும் மண் தண்ணீரை நன்கு உறிஞ்சுமாறும், சற்று சீரை தேக்கி வைக்குமாறும் இருக்க வேண்டும். பிரம்ம கமலம் ஒரு வித காக்டஸ் செடி. இதற்கு நிறைய தண்ணீர் வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஆனால் இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு ஒரு முறையாவது தண்ணீர் விட வேண்டும் என்றார்.