முதல்முறையாக டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய அணி ஆரோன் ஃபின்ச் தலைமையில் 2021ஆம் ஆண்டு வென்று அசத்தியது.
2016 உலகக் கோப்பையை மேற்கிந்தியத் தீவுகள் வெல்ல, அடுத்ததாக 2018 உலகக் கோப்பைப் போட்டிகளை ஐசிசியால் நடத்த முடியாமல் சென்றது.
கரோனா பெருந்தொற்றும் ஐசிசியின் புதிய விதியும்
பின்னர் கரோனா பெருந்தொற்றால் ஆஸ்திரேலியாவில் 2020ல் நடைபெற இருந்த போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் 2021-ல் அவை யுஎஇ, ஓமனுக்கு மாற்றப்பட்டன.
ஐசிசி தரவரிசையில் இருந்த முதல் 12 அணிகளில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்குத் தேர்வாகின. முதல் சுற்றில் இருந்து வங்கதேசம், நமீபியா, ஸ்காட்லாந்து, இலங்கை அணிகள் தேர்வாகின..
மொத்தமாக, 12 அணிகளை குரூப் 1, குரூப் 2 என பிரித்தனர். குரூப் 1 பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேச அணிகள் இருந்தன.
குரூப் 2 பிரிவில் பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா, ஆப்கானிஸ்தான், நமீபியா, ஸ்காட்லாந்து அணிகள் விளையாடின.
சூப்பர் 12 போட்டிகளில் குரூப் 1 சுற்றில் இங்கிலாந்து (8 புள்ளிகள், 4 வெற்றிகள், 1 தோல்வி) மற்றும் ஆஸ்திரேலியா (8 புள்ளிகள், 4 வெற்றிகள், 1 தோல்வி) அரையிறுதிக்கு முன்னேறின.
குரூப் 2 பிரிவில் பாகிஸ்தான் (10 புள்ளிகள், 5 வெற்றிகள்) மற்றும் நியூசிலாந்து (8 புள்ளிகள், 4 வெற்றிகள், 1 தோல்வி) அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
இந்திய அணி 3 வெற்றிகள், 2 தோல்விகள் என 6 புள்ளிகளுடம் சூப்பர் 12 சுற்றில் வெளியேறியது.
குரூப் சுற்றில் எப்படி வென்றது ஆஸ்திரேலியா?
முதல் போட்டி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அபுதாபியில் விளையாடியது. 20 ஓவர்களில் தெ.ஆ. 118/9 ரன்கள் எடுக்க, ஆஸி. 19.4 ஓவர்களில் 12/5 ரன்கள் எடுத்து வென்றது.
2ஆவது போட்டி: இலங்கைக்கு எதிராக ஷார்ஜாவில் விளையாடியது. 20 ஓவர்களில் இலங்கை அணி 154/6 ரன்கள் எடுக்க. ஆஸி. 17 ஓவர்களில் 155/3 ரன்கள் எடுத்து வென்றது.
3-ஆவது போட்டி: துபையில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில்125க்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து 11.4 ஓவர்களில் 126/2 ரன்கள் எடுத்து வென்றது.
4-ஆவது போட்டி: துபையில் வங்க தேசத்திற்கு எதிராக விளையாடியது. முதலில் விளையாடிய வங்கதேசம் 15 ஓவர்களில் 73 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து விளையாடிய ஆஸி. 6.2 ஓவர்களில் 78/2 ரன்கள் எடுத்து அபார வெற்றியடைந்தது.
இந்தப் போட்டியில் ஆடம் ஸாம்பா 5 விக்கெட்டுகள் எடுத்து தனது தலைசிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
5-ஆவது போட்டி: அபுதாபியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடியது. முதலில் விளையாடிய மே.இ.தீ. அணி 20 ஓவர்களில் 157/7 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஆஸி. 16.2 ஓவர்களில் 161/2 ரன்கள் எடுத்து வென்றது.
பாகிஸ்தான் ஆதிக்கத்துக்கு அரையிறுதியில் முற்றுப்புள்ளி வைத்த ஆஸ்திரேலியா
பலம் வாய்ந்த பாகிஸ்தானும் ஆஸ்திரேலியாவும் அரையிறுதியில் துபையில் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 176/4 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா 19 ஓவர்களில் 177/5 ரன்கள் எடுத்து வென்றது.
குரூப் சுற்றில் அனைத்து போட்டிகளையும் வென்ற பாகிஸ்தான் அணி மிகுந்த பலத்துடன் அரையிறுதிக்கு முன்னேறி இருந்தது. ஷாஹீன் ஷா அஃப்ரிடி இந்தத் தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வந்தார்.
19ஆவது ஓவரில் ஷாஹீன் ஷா அஃப்ரிடி வீசிய ஓவரில் ஹாசன் அலி தவறிய கேட்ச்சிக்குப் பிறகு, மேத்திவ் வேட் அடித்த 3 சிக்ஸர்கள் ஆட்டத்தையே மாற்றியது. உலகக் கோப்பையை ஆஸியின் பக்கம் மேத்திவ் வேட் தன்வசப்படுத்தினார்.

2021 முக்கிய புள்ளி விவரங்கள்.
அதிக ரன்கள், அதிவேக அரைசதம், அதிக சிக்ஸர்களில் ஆதிக்கம் செலுத்திய பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதில் அதிர்ச்சி அளிக்கப்பட்டது.
சொல்லப்போனால், இந்தப் போட்டியில் மட்டுமில்லாமல் இந்த உலகக் கோப்பையையே பாகிஸ்தான் வெல்லுமென்றே பலரும் நினைத்து வந்தார்கள். இந்த வெற்றிதான் ஆஸ்திரேலியாவுக்கு கோப்பை வெல்லும் தன்னம்பிக்கையை அளித்தது.
நியூசிலாந்தின் கனவைக் கலைத்த ஆஸ்திரேலியா
இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக துபையில் விளையாடியது. நியூசிலாந்து அணி முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 172/4 ரன்கள் எடுத்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் 85 ரன்கள் குவித்து அசத்தினார். ஹேசில்வுட் 3 விக்கெட்டுகள் எடுத்திருந்தார்.
அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவர்களில் 173/2 ரன்கள் எடுத்து வென்றது. ஃபின்ச் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க மூன்றாம் இடத்தில் களமிறங்கிய மிட்செல் மார்ஷ் டேவிட் வார்னரும் நன்றாக விளையாடினார்கள்.
டேவிட் வார்னர் 53 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மிட்செல் மார்ஷ் 77 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்கமால் இருந்தார். இவருடன் மேக்ஸ்வெல் 28 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார்.
இந்தப் போட்டியில் ஆட்ட நாயகனாக மிட்செல் மார்ஷ் தேர்வாக, தொடர் நாயகனாக டேவிட் வார்னர் தேர்வானார். ஆஸ்திரேலிய அணி 2022, 2024, 2026 தொடர்களில் அரையிறுதிக்குக் கூட முன்னேறாமல் சென்றது.
இந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு ரூ.11.89 கோடி பரிசுத் தொகை கிடைத்தது.
(தினமணி கருவூலத்தின் உதவியுடன்...)
summary
The Australian team won the T20 World Cup for the first time in 2021.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

6, 6, 6, 6.. கார்லஸ் பிராத்வெய்ட் ருத்ரதாண்டவம்.. மே.இ.தீவுகளின் மறக்க முடியாத உலகக் கோப்பை! 2016 ரீவைண்ட்!!

சூப்பர் 8 சுற்றுக்கு 7 அணிகள் தகுதி; கடைசி இடம் யாருக்கு?

மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் அரைசதம் விளாசல்; இலங்கைக்கு 182 ரன்கள் இலக்கு!

பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி; சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

