பாகிஸ்தானையொட்டியுள்ள ஆப்கானிஸ்தானின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ஆயுதப்படைகள் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
சமீபத்திய காலமாகவே, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லைப்புற மோதல்கள் அதிகரித்து வருகின்றன. தலீபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மற்றும் பாக்டிகா மாகாணங்களில் நடத்திய பயங்கரத் தாக்குதலில் 15-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறுகையில், “பாகிஸ்தான் ராணுவத்தினர் பெஹ்ஷூத் மாவட்டத்தில் ஒரு வீட்டை குறிவைத்து நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 23 பேர் கட்டட இடிபாடுகளுக்குள் புதைந்தனர்.
அவர்களில் இதுவரை நான்கு பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்றார்.
தெஹ்ரிக்-இ தலிபான் பாகிஸ்தான் என்றழைக்கப்படும் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், உளவுத்துறையின் அடிப்படையில் தகவலின் அடிப்படையில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் பாகிஸ்தானைச் சேர்ந்த அமைச்சர் அத்தாவுல்லா தரார் தெரிவித்தார்.
Summary
Pakistan said early Sunday (February 22, 2026) it carried out strikes along the border with Afghanistan, targeting hideouts of Pakistani militants it blames for recent attacks inside the country.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சூடானில் திருமண நிகழ்ச்சியில் ட்ரோன் தாக்குதல்: 30 பேர் பலி

திருமண நிகழ்வில் உணவு நஞ்சானதாக சந்தேகம்! 30 பேர் மருத்துவமனையில் அனுமதி!
ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்! 400 பேர் பலி!!
பொதுமக்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல்: ஆப்கன் குற்றச்சாட்டு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



