உத்திரப் பிரதேசத்தில் திருமண நிகழ்வில் உணவு நஞ்சானதாக சந்தேகப்பட்டதன் பேரில் 30 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முகமது நஜிம் என்பவரின் திருமணத்தின் போது, தேவா பகுதியின் லாலாபூர் வட்டாரத்தில் சனிக்கிழமை மாலை இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
சுகாதார அதிகாரிகளின் தகவலின்படி, நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட பல்வேறு அசைவ உணவுகளை உட்கொண்ட விருந்தினர்கள் சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு, கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தியால் அவதிப்படத் தொடங்கினர். இதனையடுத்து, அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சையை மேற்பார்வையிட சம்பவ இடத்திற்கு வந்த தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அவதேஷ் யாதவ், “உள்ளூர் மக்களிடமிருந்து தகவல் கிடைத்ததும் கிராமத்துக்கு ஆம்புலன்ஸ் விரைந்து அனுப்பப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரும் ஆரம்பத்தில் தேவாவில் உள்ள சமூக சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். பலர் உயர்சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலர் உடல்நிலை சீரடைந்த பின்னர் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். உணவு நஞ்சானதற்கான சரியான காரணத்தைக் கண்டறிய சுகாதாரத் துறை முழுமையான விசாரணை நடத்தி வருகிறது” எனத்ன் தெரிவித்தார்.
மேலும், அதிகாரிகள் பரிசோதனைக்காக உணவு மாதிரிகளைச் சேகரித்து அதனை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
Summary
In Uttar Pradesh, more than 30 people have been hospitalized on suspicion of food poisoning at a wedding event.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செங்கோட்டில் வெறிநாய்கள் கடித்ததில் 50-க்கும் மேற்பட்டோா் காயம்
உணவு விநியோக நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் நிறைவு!

வருவாய்த்துறை கூட்டமைப்பினர் சாலை மறியல்! 500க்கும் மேற்பட்டோர் கைது!

இந்தியர்களின் உணவில் புரட்சி செய்திருக்கும் புரதம்! நல்லதா? கெட்டதா?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



