புதுதில்லி: வணிக சிலிண்டர்களின் பற்றாக்குறை காரணமாக, உணவு விநியோக நிறுவனங்கள் மற்றும் உணவகங்களின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் சரிந்து முடிவடைந்தன. இந்த நிலைமை தீர்க்கப்படாவிட்டால் அனைத்து விதாமான செயல்பாடுகள் முடக்கப்படும் என்ற அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது.
பெங்களூரு மட்டுமில்லாது மும்பை உள்பட நாட்டின் முக்கிய பெருநகரங்களில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கச்சா எண்ணெய் தட்டுப்பாடு அதிகரிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவித்து வந்த சூழலில், நேற்றிலிருந்து நாடு முழுவதும் வணிக சிலிண்டர்கள் விநியோகமும் முழுமையாக நிறுத்தப்பட்டது. இதனால், உணவகங்கள் கடும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், மும்பை பங்குச் சந்தையில், உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி-யின் பங்கு 2.26 சதவீதமும், எடர்னல் பங்குகள் 1.50 சதவீதம் வரை சரிந்தன.
துரித உணவு சங்கிலிகளான டோமினோஸ் பிட்சா மற்றும் டன்கின் டோனட்ஸ் ஆகியவற்றை இயக்கும் ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் பங்குகள் 1.45 சதவீதமும், யுனைடெட் ஃபுட்பிராண்ட் 1.42 சதவீதமும், சபையர் ஃபுட்ஸ் இந்தியா 0.94 சதவீதமும், ரெஸ்டாரண்ட் பிராண்ட்ஸ் ஆசியா 0.73 சதவீதமும் சரிந்தன.
புனே, அவுரங்காபாத், நாக்பூர், புதுதில்லி, கர்நாடகம், தெலங்கானா மற்றும் ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலும் இதேபோன்ற இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஹோட்டல் மற்றும் உணவக கூட்டமைப்பின் துணைத் தலைவர் பிரதீப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
Summary
Stocks of food delivery players and restaurants ended lower on Tuesday amid a shortage of commercial LPG cylinders.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை என்ற நம்பிக்கையால் சென்செக்ஸ், நிஃப்டி எழுச்சி!
அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!

தெருச் சண்டையைத் தடுக்க முயன்ற உணவு விநியோக ஊழியா் கொலை

திருமண நிகழ்வில் உணவு நஞ்சானதாக சந்தேகம்! 30 பேர் மருத்துவமனையில் அனுமதி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


