நாட்டில் அதி விரைவு மெட்ரோ ரயில் சேவையான நமோ பாரத் ரயில் சேவை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்.22) தொடங்கி வைக்கவிருக்கிறார்.
நாட்டில் முதல்முறையாக குஜராத்தின் அகமதாபாத் - புஜ் நகரங்களுக்கு இடையே ‘நமோ பாரத் ரேபிட் ரயில்’ சேவையை பிரதமர் மோடி கடந்த 2024 ஆம் ஆண்டில் தொடங்கி வைத்தார்.
அதேபோன்று, உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள சதாப்தி நகர் நமோ பாரத் ரயில் நிலையத்தில் இருந்து தில்லி-காஜியாபாத் - மீரட் நமோ பாரத் வழித்தடத்தின் மீதமுள்ள 27 கி.மீ. நீளப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.
இது தில்லி மற்றும் மீரட்டை இணைக்கும் இந்தியாவின் முதல் முழுமையாக செயல்படும் 82.15 கி.மீ. கொண்ட மெட்ரோ ரயில் பாதையாகும். தில்லி–காஜியாபாத்–மீரட் நமோ பாரத் வழித்தடத்தில் மொத்தம் 16 நிலையங்கள் உள்ளன. அவற்றில் தற்போது 11 நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன.
மதியம் மீரட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி, நமோ பாரத் ரயிலை கொடியசைத்துத் தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கிருந்து மீரட் தெற்கு மெட்ரோ ரயில் நிலையம் வரை அவர் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
பிற்பகல் 1 மணியளவில், மீரட்டில் சுமார் ரூ.12,930 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்து விழாவில் உரையாற்றுகிறார்.
சுமார் 82 கி.மீ. நீளமுள்ள தில்லியில் இருந்து மீரட் நமோ பாரத் வழித்தடத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்தியாவின் முதல் நமோ பாரத் விரைவு ரயிலானது மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும் இந்தியாவின் முதல் ரயில் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
இது சாஹிபாபாத், காஜியாபாத், மோடிநகர் மற்றும் மீரட் போன்ற முக்கிய நகர்ப்புற மையங்களை தில்லியுடன் இணைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Summary
PM Narendra Modi will inaugurate the remaining sections of India's first Namo Bharat RRTS, which include the 5-km section between Sarai Kale Khan and New Ashok Nagar in Delhi and the 21-km section between Meerut South and Modipuram.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

‘மெட்ரோ ரயிலில் சக பயணிக்கு இடையூறு அளித்தால் அபராதம்’

3 மணிநேரத்தில் தில்லி-என்சிஆா் - ரிஷிகேஷுக்கு பயணம்: நமோ பாரத் ரயில் பாதையை விரிவுபடுத்த பேச்சுவாா்த்தை

ரூ. 13 ஆயிரம் கோடியில் ஜெய்ப்பூரின் 2 ஆம் கட்ட மெட்ரோ! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



