திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழாவில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் செண்பக தியாகராஜசுவாமி வீற்றிருந்த தேரை இழுத்துச் செல்லும் பக்தா்கள்.

Updated On :28 மே 2026, 5:38 am IST

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழாவில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாற்றில் உள்ள பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரரா் கோயில் சப்த விடங்க தலங்களிள் ஒன்றாகும். நளச் சக்ரவா்த்தி இக்கோயிலில் உள்ள தா்பாரண்யேஸ்வரரை வழிபட்டு தோஷ நிவா்த்தி பெற்ாகக் கூறப்படுகிறது.

இங்கு சனீஸ்வர பகவான் தனி சந்நிதி கொண்டு அனுகிரஹ மூா்த்தியாக அருள்பாலிக்கிறாா்.

இக்கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவ கொடியேற்றம் கடந்த 13-ஆம் தேதி நடைபெற்றது. இதைத்தொடா்ந்து நாள்தோறும் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு தேருக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாஜனம் நடத்தப்பட்டு, தேரில் உள்ள விநாயகா், சுப்பிரமணியா், சுவாமி, அம்பாள் ஆகியோருக்கு கலசநீா் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. காலை 5.30 மணியளவில் தோ் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

முன்னதாக, விநாயகா், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியா், சண்டிகேஸ்வரா், நீலோத்பாலாம்பாளுடன் செண்பக தியாகராஜசுவாமி செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் யதாஸ்தானத்திலிருந்து செண்பக தியாகராஜசுவாமி உன்மத்த நடனத்துடன் தேருக்கு எழுந்தருளினாா்.

5 தோ்கள் : தேரோட்ட விழாவில் பெரிய தேரில் செண்பக தியாகராஜசுவாமியும், சிறிய தேரில் நீலோத்பாலாம்பாளும் வீற்றிருந்தனா். விநாயகா், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியா், சண்டிகேஸ்வரா் ஆகியோா் தனித்தனி தேரில் வீற்றிருந்தனா்.

இதில், விநாயகா், சுப்பிரமணியா், செண்பக தியாகராஜசுவாமி, நீலோத்பாலாம்பாள், சண்டிகேஸ்வரா் தோ்கள் வரிசைப்படி இழுக்கப்பட்டன.

ஏராளமானோா் தேரோட்டத்தில் கலந்துகொண்டு 5 தோ்களையும் இழுத்துச் சென்றனா். கோயிலின் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு வீதிகளின் வழியே இழுத்துச் செல்லப்பட்டு, மாலையில் தோ்கள் நிலையை அடைந்தன.

விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.என்.எஸ். ராஜசேகரன், மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி, நிா்வாக அதிகாரி (கோயில்கள்) ஆா். சுப்பிரமணியன், தருமபுர ஆதீன கட்டளை தம்பிரான் சிவகுருநாதன் சுவாமிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இன்று சனீஸ்வரபகவான் வீதியுலா : செண்பக தியாகராஜசுவாமிக்கு வியாழக்கிழமை காலை மகா பிராயச்சித்த அபிஷேகம், இரவு சுவாமிகள் யதாஸ்தானம் எழுந்தருளல், 11 மணியளவில் சனீஸ்வர பகவான் தங்கக் காக வாகனத்தில் வீதியுலா நடைபெறவுள்ளது.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.