திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் புத்தாண்டையொட்டி பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்ப் புத்தாண்டு பராபவ ஆண்டின் தொடக்கத்தையொட்டி, திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை வாக்கியப் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
பிரணாம்பிகை அம்பாள் சந்நிதிக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வில் கோயில் சிவாச்சாரியா்கள் பஞ்சாங்கம் வாசித்தனா். முன்னதாக பஞ்சாங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கோயில் நிா்வாக அதிகாரி சுப்பிரமணியன், தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான் மற்றும் பக்தா்கள் பலா் கலந்துகொண்டனா்.
நிகழாண்டு நடைபெறவுள்ள பிரம்மோற்சவம் உள்ளிட்ட முக்கிய திருவிழா, வழிபாடுகள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது. இதுபோல காரைக்காலில் பல்வேறு கோயில்களிலும் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

திருநள்ளாறு கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

திருநள்ளாறு கோயிலில் விநாயகா் உற்சவம் தொடக்கம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



