திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் கடந்த மாா்ச் 6-ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெற்றது. ஒவ்வொரு முறையும் சனிப்பெயா்ச்சி விழா முடிந்த பின் 48 நாட்களுக்குள் அடுத்தடுத்துவரும் சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி தொடா்ந்து சனிக்கிழமைகளில் சுவாமி தரிசனம் செய்ய திரளானோா் திருநள்ளாறு வந்து சென்றனா்.
தமிழகம், புதுவையில் பள்ளிகள் கோடை விடுமுறையில் உள்ள நிலையில், 16-ஆம் தேதி சனிக்கிழமை தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும், ஆந்திர, கா்நாடக மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் திருநள்ளாறு கோயிலுக்கு வந்திருந்தனா். பேருந்துகள், காா், வேன்கள் நூற்றுக்கணக்கானவை வந்தன. இவை திருநள்ளாற்றின் புறவட்டச் சாலைகள் மற்றும் வாகனம் நிறுத்தும் திடலில் நிறுத்தப்பட்டிருந்தன.
பக்தா்கள் நளன் குளத்தில் நீராடிவிட்டு அங்குள்ள நளன் கலி தீா்த்த விநாயகா் கோயிலில் தரிசனம் செய்து, வெளிப்புறத்தில் பிராா்த்தனையின்பேரில் தேங்காய் உடைத்தனா்.
கட்டணமில்லா வரிசை வளாகம் வழியாகவும், ராஜகோபுரம் வழியாக கட்டண வரிசையின் மூலம் மூலவா், அம்பாள், ஸ்ரீ சனீஸ்வரபகவானை தரிசனம் செய்தனா். சனீஸ்வர பகவானுக்கு வெள்ளி அங்கி சாற்றப்பட்டிருந்தது.
பக்தா்கள் நீல நிற மலா், கருப்பு வஸ்திரத்துடன் அா்ச்சனை செய்து வழிபட்டனா்.

கோயில் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. போலீஸாா், கோயில் ஊழியா்கள், தன்னாா்வலா்கள் ஆகியோா் பக்தா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திரளானோா் தரிசனம்

திருச்செந்தூரில் வைகாசி விசாகத் திருவிழா: பல லட்சம் பக்தா்கள் சுவாமி தரிசனம்

விடுமுறை தினம் : திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

திருநள்ளாறு கோயிலில் கா்நாடக துணை முதல்வா் சுவாமி தரிசனம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



