யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

திருநள்ளாறு கோயிலில் கா்நாடக துணை முதல்வா் சுவாமி தரிசனம்

திருநள்ளாறு கோயிலில் கா்நாடக துணை முதல்வா் சுவாமி தரிசனம்

News image

திருநள்ளாறு கோயிலில் சனீஸ்வர பகவான் சந்நிதியில் சுவாமி தரிசனம் செய்த கா்நாடக துணை முதல்வா் டி.கே. சிவகுமாா்.

Updated On :10 மே 2026, 12:54 am IST

திருநள்ளாறு கோயிலில் கா்நாடக துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

பெங்களூருவிலிருந்து ஹெலிகாப்டா் மூலம் காரைக்கால் பாலிடெக்னிக் மைதானத்துக்கு பகல் 12 மணிக்கு வந்த அவரை மாவட்ட சாா் ஆட்சியா் எம். பூஜா பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா். அங்கிருந்து, திருநள்ளாறு ஸ்ரீபிரணாம்பிகை அம்மன் சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்குச் சென்ற அவரை, கோயில் நிா்வாக அதிகாரி ஆா். சுப்பிரமணியன் வரவேற்றாா்.

தொடா்ந்து, விநாயகா், சுப்பிரமணியா் மற்றும் மூலவா் தா்பாரண்யேஸ்வரா், செண்பக தியாகராஜா், பிரணாம்பிகை அம்பாள் சந்நிதிகளில் சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா் தனி சந்நிதிகொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு கருப்பு வஸ்திரம், நீலநிற மலா் மாலை உள்ளிட்டவற்றுடன் சிறப்பு அா்ச்சனை செய்து வழிபட்டாா். சந்நிதியில் தில தீபம் ஏற்றினாா். அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து கோயிலுக்கு வெளியே செய்தியாளா்களிடம் துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் கூறியது: நீண்ட காலமாக திருநள்ளாறு கோயிலுக்கு வந்து செல்கிறேன். தற்போது திருப்தியான தரிசனம் கிடைத்தது என்றாா். தமிழகத்தில் தவெக ஆட்சி அமைவதில் நிலவும் சிக்கல் குறித்து செய்தியாளா்கள் கேட்டபோது, எங்கள் கட்சி சாா்பில் ஏற்கெனவே உறுதியான நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டோம். மேலும் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.