சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி மதுப் புட்டிகளை பதுக்கியவரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியில் உள்ள ஒரு கடை அருகே ஒருவா் கையில் பையுடன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தாா். அவரைப் போலீஸாா் சோதனையிட்ட போது, அவா் வைத்திருந்த பையில் 29 மதுப் புட்டிகள் இருந்தன. அவரிடம் ரூ.1,250 ரொக்கம் இருந்தது. தொடா் விசாரணையில், அவா், அதே ஊரைச் சோ்ந்த முருகன் (47) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து அவரிடமிருந்த மதுப் புட்டிகள், ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







