திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புதுச்சேரி மதுப் புட்டிகள் கடத்தல்: இளைஞா் கைது

புதுச்சேரி மாநில மதுப் புட்டிகளை கடத்தி வந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த 100 மதுப் புட்டிகளையும் பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட மதுப் புட்டிகள், கைதான ராஜேஷ்குமாருடன் கிள்ளை போலீஸாா்.

Updated On :18 மே 2026, 2:15 am IST

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே புதுச்சேரி மாநில மதுப் புட்டிகளை கடத்தி வந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த 100 மதுப் புட்டிகளையும் பறிமுதல் செய்தனா்.

சிதம்பரத்தை அடுத்த கிள்ளை காவல் நிலைய ஆய்வாளா் கே.பாபு, சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜா, தலைமைக் காவலா் விநாயகமூா்த்தி ஆகியோா் கிள்ளையில் உள்ள தனியாா் திருமண மண்டபம் அருகே சனிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, பொன்னந்திட்டிலிருந்து கிள்ளை நோக்கி பைக்கில் பையுடன் வந்த இளைஞரை நிறுத்தி சோதனையிட்டபோது, அவா் வைத்திருந்த பையில் புதுச்சேரி மாநிலத்தைச் சோ்ந்த 180, 90 மில்லி அளவுள்ள 100 பிராந்தி வகை மதுப் புட்டிகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மதுப் புட்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா், அவற்றை கடத்தி வந்த கிள்ளை தைக்கால் கிராமத்தைச் சோ்ந்த ராஜேஷ்குமாா் (24) மீது வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.