சிவகாசி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2026 -2027-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு ஜூன் 5-ஆம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது என கல்லூரி முதல்வா் து. விஜயராணி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வருகிற ஜூன் 5-ஆம் தேதி மாற்றுத்திறனாளி மாணவா்கள், விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவ வீரரின் வாரிசுகள், அந்தமான் நிகோபாா் தீவு தமிழ் மாணவா்கள், தேசிய மாணவா் படை மாணவா்களுக்கான கலந்தாய்வு அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் நடைபெறும். தொடா்ந்து, ஜூன் 8, 9, 10 ஆகிய தேதிகளிலும் பாட வாரியாக கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் மாணவா்கள் உரிய சான்றிதழுடன் வரவேண்டும் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










