தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

அருப்புக்கோட்டை பகுதிகளில் ரூ. பல கோடி சேலைகள் தேக்கம்: நெசவாளர்கள் கடும் பாதிப்பு

ஆந்திராவில் நடைபெறும் தொடர் போராட்டத்தின் விளைவாக, அருப்புக்கோட்டையில் சேலைகள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Updated On :22 செப்டம்பர் 2013, 7:38 pm

ஆந்திராவில் நடைபெறும் தொடர் போராட்டத்தின் விளைவாக, அருப்புக்கோட்டையில் சேலைகள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

   அருப்புக்கோட்டை பகுதியில் விசைத்தறி மூலம் சேலை உற்பத்தி செய்வது முக்கிய தொழிலாக உள்ளது. இப்பகுதியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. இதில் நேரடியாக சுமார் 15 ஆயிரம் தொழிலாளர்களும், மறைமுகமாக 7 ஆயிரம் தொழிலாளர்களும் என மொத்தம் 22 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.   விசைத்தறியில் பாலிகாட்டன், காட்டன் பை, காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலைகள் ஈரோடு மார்க்கெட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கிருந்து வியாபாரிகள் ஆந்திர மாநிலத்தில் உள்ள துவாரக்குடி, சீரளா மார்க்கெட்டுகளுக்கு சேலைகளை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். ஆந்திர மாநிலத்தின் இயற்கை சூழலுக்கு தகுந்தவாறு அங்கு வசிக்கும் மக்கள் காட்டன் சேலைகளையே அதிகம் விரும்பி அணிகின்றனர். தற்போது ஆந்திராவில் தனி தெலுங்கானாவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால், அங்கு வியாபாரம் பாதிப்படைந்துள்ளது.  இதன் காரணமாக ஆந்திர வியாபாரிகள், அருப்புக்கோட்டை மற்றும் ஈரோடு பகுதிகளுக்கு சேலைகள் வாங்க வருவது வெகுவாக குறைந்து விட்டது. எனவே அருப்புக்கோட்டை பகுதிகளில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சேலைகள் தேங்கிக் கிடக்கிறன.   நெசவாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பை சரிகட்ட தமிழக அரசே சேலைகளை கொள்முதல் செய்ய வேண்டுமென நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.