டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

விவசாயிகள் சங்க மாநாட்டு குழு கூட்டம்

கால்நடைகளை தாக்கி அழித்து வரும் கோமாரி நோயை, ஆரம்பத்திலேயே தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:54 pm

கல்யாணி வெங்கடராமன்

கால்நடைகளை தாக்கி அழித்து வரும் கோமாரி நோயை, ஆரம்பத்திலேயே தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழு கூட்டம், மாவட்டத் தலைவர் குருசாமி தலைமையில், மல்லாங்கிணறில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் விஜயமுருகன் வரவேற்றார்.

  மாநில துணைச் செயலர் சுருளிநாதன் பேசினார். காரியாபட்டி ஒன்றிய செயலர் அம்மாசி நன்றி கூறினார். கால்நடைகளை கோமாரி நோய் தாக்கி வருகிறது. ஆரம்பத்திலே இந்நோயை கட்டுப்படுத்த, போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி போட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  நோய்த் தாக்கி இறந்த கறவை மாடுகளுக்கு ரூ.25 ஆயிரம், சினை மாடுகளுக்கு ரூ.20 ஆயிரம், சாதாரண மாடுகளுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.