தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கே.மீனாட்சிபுரத்தில் சிறப்பு திட்ட முகாம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரி மாணவிகள் ஆரோக்கியமும் சுகாதாரமுமான இளமையும் என்ற தலைப்பின் கீழ் 7 நாள்கள் கே. மீனாட்சிபுரத்தில் சிறப்பு முகாம் அமைத்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Updated On :28 டிசம்பர் 2013, 6:42 pm

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரி மாணவிகள் ஆரோக்கியமும் சுகாதாரமுமான இளமையும் என்ற தலைப்பின் கீழ் 7 நாள்கள் கே. மீனாட்சிபுரத்தில் சிறப்பு முகாம் அமைத்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

  இம் முகாமில் பல்வேறு கருத்தரங்குகள், களப்பணிகள், மரக்கன்று நடுதல், மகளிர் மேம்பாட்டுக்கான சுயதொழில் பயிற்சி, இலவச பொது மருத்துவ முகாம், கண் சிகிச்சை முகாம் மற்றும் சிறுவர், சிறுமியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. முகாமின் துவக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் முத்துச்செல்வன் தலைமை தாங்கினார். நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர் சண்முகப்பிரியா அனைவரையும் வரவேற்றார். முகாமில் மாணவிகள் பங்கு பற்றியும் சுகாதாரம் கண், ரத்த தானம், உடல் தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதின் அவசியம் மற்றும் பயன்கள் பற்றியும் முதல்வர் விளக்கினார். கணிதவியல் துறைத் தலைவர் சந்திரமவுலீஸ்வரன் வாழ்த்துரை வழங்கி, மாணவிகள் மக்களுடன்  ஒன்றிணைந்து செயல்படுமாறு கூறினார். ஆலடிபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் செல்லத்துரை வாழ்த்திப் பேசினார். மேலும் மாணவிகளிடம் மக்களிடையே நீரின் மேலாண்மை சுகாதாரம் மற்றும் மருத்துவ முகாம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார். இம்முகாமில் கே.மீனாட்சிபுரம் ஊராட்சி தலைவர் பாண்டி, உதவித்தலைவர் ராஜசேகர் கிராம நிர்வாக அலுவலர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.