தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கல்லூரி மாணவர்கள் என்.எஸ்.எஸ். முகாம்

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணரில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் சிறப்பு முகாம் நடைபெற்றது.

Updated On :27 டிசம்பர் 2013, 6:44 pm

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணரில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் சிறப்பு முகாம் நடைபெற்றது.

  மல்லாங்கிணர், திம்மன்பட்டி, முடியனூர், சூரம்பட்டி, கோவில்பட்டி உள்பட பல கிராமங்களில் போதைப் பொருள் ஒழிப்பு, திடக்கழிவு மேலாண்மை, சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு குறித்து கிராம மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரத்தை மாணவர்கள் மேற்கொண்டனர்.

  நிகழ்ச்சிக்கு, காமராஜர் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துலெட்சுமி தலைமை வகித்தார்.

  தேவாங்கர் கலைக் கல்லூரி மாணவ, மாணவியர் 250-க்கும் மேற்பட்டோர் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள் ஸ்டீபன் பொன்னையா, பாபு திருவராஜ், ரேணுகாதேவி, ஹேமலதா, கௌசல்யா தேவி தலைமையில் மல்லாங்கிணர் மெயின் ரோடு, பேரூராட்சி அலுவலகம், சென்னகேசவபெருமாள் கோவில் உள்பட பல்வேறு சாலையோரங்களில் வளர்ந்திருந்த முள்செடிகளை அகற்றி சுத்தம் செய்தனர்.

  முகாமில், மருத்துவர் பரிமளசெல்வன், முகம்மது ஜக்கரியா, வாகன ஆய்வாளர் ஹரிஹரன், அமுதா லட்சுமிகாந்தா, கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் பாண்டுரங்கன் ஆகியோர் கலந்துகொண்டு, மாணவர்களிடையே பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

  முகாம் ஏற்பாடுகளை கலைக் கல்லூரி நிர்வாகம், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள், மல்லாங்கிணர் பேரூராட்சி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.