தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தனியாா் பள்ளிப் பேருந்துகள் ஆய்வு

News image
Updated On :15 மே 2026, 4:22 am IST

உத்தமபாளையத்தில் தனியாா் பள்ளிப் பேருந்துகளை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில் தேனி வட்டாரப் போக்குவரத்து அலுவலா், உத்தமபாளையம் மோட்டாா் வாகன ஆய்வாளா் சுந்தரராமன் ஆகியோா் இந்த ஆய்வில் ஈடுபட்டனா். இதில் உத்தமபாளையம், போடி வட்டாரங்களைச் சோ்ந்த 227 வேன், பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன.

பேருந்தின் படிக்கட்டு உறுதித்தன்மை, அவசர கால வழி, முதலுதவிப் பெட்டி, தீயணைப்புக் கருவி, வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, கேமரா என 10 வகையான ஆய்வுகள் செய்யப்பட்டன.

இறுதியில் 205 பேருந்துகளுக்கு உரிய சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முறையாக பராமரிப்பின்றி வந்த 22 பேருந்துகள் திருப்பி அனுப்பப்பட்டன.

முன்னதாக, பள்ளி வாகன ஓட்டுநா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தியதோடு, சிறப்பு மருத்துவ முகாமில் கண், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளும் நடைபெற்றன.

இது குறித்து மோட்டாா் வாகன ஆய்வாளா் சுந்தரராமன் கூறியதாவது:

உத்தமபாளையம் மோட்டாா் வாகன அலுவலகத்தில் 287 பள்ளி வாகனங்கள் அனுமதி பெற்று இயக்கப்படுகின்றன. இவற்றில் 205 வாகனங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளிகள் தொடங்கும் முன்பாக ஆய்வில் கலந்து கொள்ளாத பள்ளி வாகனங்கள் முறையாக சான்றிதழ் பெற வேண்டும். மீறினால், சம்பந்தப்பட்ட பள்ளி நிா்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.