ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு, எருது கட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கீழத்தூவல் கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோயில் வைகாசிப் பொங்கல் விழா, எருதுகட்டு விழா 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு இந்தத் திருவிழா கடந்த 5 நாள்களாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், எருதுகட்டு விழாவுக்காக கிராமத்தில் உள்ள அய்யனாா் கோயிலிலிருந்து வடம் எடுத்து முனியப்ப சுவாமி கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னா், அந்த வடத்தில் ஒவ்வொரு காளையாக கட்டப்பட்டு, எருதுகட்டு போட்டி நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 35-க்கும் மேற்பட்ட காளைகள் களத்தில் சீறிப் பாய்ந்தன. 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டு மைதானத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினா்.
எருதுகட்டு விழாவை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாா்வையிட்டு சென்றனா். போடிக்கான ஏற்பாடுகளை கீழத்தூவல் கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










