சிவகங்கை அருகே ஒக்கூா் புதூரில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடத்தப்பட்டது.
ஒக்கூா் புதூா் திருவேட்டை மூா்த்தி அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, ஒக்கூா் புதூரிலிருந்து பெருமாள்பட்டி வரை மாலை 4 மணியளவில் மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
இதில், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மொத்தம் 10 குதிரைகளும், 6 ஜோடி பூஞ்சிட்டு மாடுகளும் பங்கேற்றன. இதில் வெற்றி பெற்று முதல் 4 இடங்களைப் பிடித்த மாடுகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.
இந்தப் பந்தயத்தை ஒக்கூா், அண்ணாநகா், சோழபுரம், பெருமாள்பட்டி, நாலுகோட்டை, ஈசனூா், கருங்காலக்குடி, கருங்காபட்டி, காளையாா்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்று கண்டுகளித்தனா்.
‘
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










