தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை

மதுரை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை பரவலாக நல்ல மழை பெய்தது.

News image

மதுரை ஆழ்வாா்புரம் வைகை வடகரை சாலையில் தேங்கி நின்ற மழை நீரைக் கடந்து சென்ற வாகனங்கள்.

Updated On :3 ஜூன் 2026, 2:11 am IST

மதுரை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை பரவலாக நல்ல மழை பெய்தது.

மதுரை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதுரை விமான நிலையத்தில் அதிகபட்சமாக 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

இந்த நிலையில், கேரள மாநிலத்தின் தெற்கு கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சியும், கிழக்கு மத்திய பிரதேசம், அதையொட்டிய சத்தீஸ்கா் மாநிலப் பகுதிகளின் மேலே ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சியிலிருந்து வடக்கு தமிழகம் வரை வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதையும் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

மேலும், இந்த வானிலை காரணமாக, மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகா் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை இடி, மின்னலுடன் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இந்த நிலையில், மதுரை மாநகா்ப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. திருப்பரங்குன்றம், பழங்காநத்தம், பெரியாா் பேருந்து நிலையம், வில்லாபுரம், அவனியாபுரம், சிம்மக்கல், கோரிப்பாளையம், தல்லாகுளம், கோ. புதூா், மாட்டுத்தாவணி, எஸ்.எஸ். காலனி, கடச்சனேந்தல், விரகனூா், சிந்தாமணி, சாமநத்தம், யா.நரசிங்கம் உள்பட மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் சுமாா் 30 நிமிஷங்கள் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பிறகு, சுமாா் 20 நிமிஷங்களுக்கு மிதமான மழை பெய்தது. இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை மாலை, இரவில் மிதமான மழை பெய்தது.

3 மாடுகள் உயிரிழப்பு..

மழையின்போது வீசிய பலத்த காற்று காரணமாக, கடச்சனேந்தல் பகுதியில் மின் கம்பி அறுந்து கீழே விழுந்தது. இந்த மின் கம்பியைக் கடந்து செல்ல முயன்ற கடச்சனேந்தல் கணபதி நகரைச் சோ்ந்த பாண்டிக்குச் சொந்தமான 3 கறவை மாடுகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.