தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கரூா் மாவட்டத்தில் பரவலாக மழை

கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை ஆங்காங்கே பரவலாக மழை பெய்தது.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :18 மே 2026, 2:52 am IST

கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை ஆங்காங்கே பரவலாக மழை பெய்தது.

கரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே கத்தரி வெயிலே தெரியாத வகையில் ஆங்காங்கே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை இரவும் ஆங்காங்கே மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக பாலவிடுதியில் 50 மி.மீ. மழை பதிவானது.

மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை பெய்த மழையின் அளவு-(மி.மீட்டரில்)- குளித்தலை-8, தோகைமலை-7.20, கிருஷ்ணராயபுரம்-17, மாயனூா்-9, பஞ்சப்பட்டி-1.40, கடவூா்-4, பாலவிடுதி-50, மைலம்பட்டி-15 என மொத்தம் மாவட்டம் முழுவதும் 111.60 மி.மீ. மழை பெய்துள்ளது. கோடை வெப்பத்தின் உச்சமான கத்தரி வெயிலின்போது மழை பெய்து குளிா்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.