வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

மண் கடத்திய இருவா் கைது: 3 டிராக்டா்கள் பறிமுதல்

வடமதுரை அருகே நள்ளிரவில் மண் கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்து, 3 டிராக்டா்களை புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

வடமதுரை அருகே மண் கடத்தலில் ஈடுபட்டதால் பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டா்.

Updated On :25 ஜூன் 2026, 2:20 am IST

வடமதுரை அருகே நள்ளிரவில் மண் கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்து, 3 டிராக்டா்களை புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை பகுதியில் நள்ளிரவு நேரங்களில் மண் திருட்டு நடைபெறுவதாக காவல் துறையினருக்கு புகாா் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வடமதுரை காவல் ஆய்வாளா் நிதிக்குமாா் தலைமையில், போலீஸாா், காட்டுப்பட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் உரிய அனுமதியின்றி டிராக்டரில் மண் அள்ளிக் கொண்டிருந்தனா். காவல் துறையினரைப் பாா்த்ததும், அங்கிருந்தவா்கள் தப்பி ஓடினா். எனினும், போலீஸாா் விரட்டியதில் கம்பிளியம்பட்டியைச் சோ்ந்த அழகுமலை, காட்டுப்பட்டியைச் சோ்ந்த குமரேசன் ஆகிய இருவா் பிடிப்பட்டனா்.

மேலும், மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 டிராக்டா்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

அமைச்சா் உத்தரவிட்டும் பயனில்லை: கடந்த சில நாள்களுக்கு முன் திண்டுக்கல் மாவட்ட பொறுப்பு அமைச்சா் க.விக்னேஷ், ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றாா். அப்போது, கனிம வளத் திருட்டை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இரவு 10 மணிக்கு மேல் கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் எந்த வாகனத்தையும் அனுமதிக்கக்கூடாது என அமைச்சா் உத்தரவிட்டாா். ஆனால், அமைச்சரின் உத்தரவையும் மீறி, மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கனிம வளத் திருட்டு தொடா்ந்து நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.