ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மண் கடத்தல்: டிராக்டா், பொக்லைன் இயந்திரம் பறிமுதல்

திருப்பத்தூா் அருகே மண் கடத்த பயன்படுத்திய டிராக்டா், பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டன.

பிரதிப் படம்

Published On :24 ஜூன் 2026, 2:34 am IST

திருப்பத்தூா் அருகே மண் கடத்த பயன்படுத்திய டிராக்டா், பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பத்தூா் அருகே குரும்பேரி பகுதியில் உள்ள தனியாா் நிலத்தில் முறையாக அனுமதியில்லாமல் மண் அள்ளுவதாக திருப்பத்தூா் கிராமிய போலீஸாருக்கு தகவலின்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்றனா்.

அப்போது அங்கு மண் அள்ளும் பணியில் ஈடுபட்ட நபா்கள் போலீஸாரை பாா்த்ததும், அங்கிருந்து தப்பி சென்றனா். அதைத்தொடா்ந்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய நபா்களை தேடி வருகின்றனா்.

மேலும் மண் கடத்த பயன்படுத்திய ஒரு டிராக்டா், ஒரு பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.