கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

திருவாடானை அருகே அணை கட்டப்படுமா?

திருவாடானை, ஆக. 5: திருவாடானை தாலுகா ஆர்.எஸ். மங்கலம் கோட்டக்கரை ஆற்று பகுதியில் கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீரை சேமிக்க, சிறு சிறு அணைகள்  கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாடானை

News image
Updated On :27 டிசம்பர் 2023, 5:00 pm

கே. ரவி

திருவாடானை, ஆக. 5: திருவாடானை தாலுகா ஆர்.எஸ். மங்கலம் கோட்டக்கரை ஆற்று பகுதியில் கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீரை சேமிக்க, சிறு சிறு அணைகள்  கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாடானை தாலுகா, தமிழகத்தின் இரண்டாவது நெல் களஞ்சியம் என அழைக்கபடுவது உண்டு. இங்கு சுமார் 1 லட்சத்து 50 ஹெக்டேர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்படுகிறது.

தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாயும் திருவாடானை தாலுகா ஆர்.எஸ். மங்கலத்தில்தான் உள்ளது. இந்த ஊரில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் கோட்டக்கரை ஆறு உள்ளது. மழைகாலங்களில் சிவகங்கை மாவட்டத்தில் பெய்யும் மழை வெள்ளம், இந்த ஆற்றின் வழியாகத்தான் கடலில் வீணாகக் கலக்கிறது.

கடந்த 2004ம் ஆண்டு பெய்த கனமழையின் போது காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஒடியது. அப்போது அரசுப் பேருந்து ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டு சுமார் 39 பேர் பலியானார்கள்.

அதன் விளைவாக தமிழக அரசின் முயற்சியால், ரூ. 14 கோடி செலவில் மிகப் பிரமாண்டமான பாலம் ஆற்றின் குறுக்கே கட்டபட்டுள்ளது. இந்த ஆற்றில் வரும் வெள்ளம் முழுவதும் கடலில் கலக்கிறது. எனவே இந்த ஆற்றின் குருக்கே 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பு அணை கட்டினால் இந்தப் பகுதியின் சிறு பாசன கண்மாய்களில் தண்ணீரை சேகரித்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் பெயன் பெறச் செய்ய முடியும். நிலத்தடி நீரும் உயரும். மழை இல்லாத காலங்களில் விவசாயம் செய்ய பெரிதும் உதவியாக இருக்கும்.எனவே இப்பகுதியில் ஆற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது சம்பந்தமாக ஆர்.எஸ். மங்கலம் ஒன்றியத் தலைவர் நல்ல சேதுபதி கூறியது:இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை இந்த அணைக்கட்டு பிரச்னை. நெல் பயிரைத் தவிர பருத்தி, மிளகாய், கரும்பு போன்ற பணப் பயிர்களையும் விளைவிக்கின்றனர். மழைநீர் இல்லாத போது நிலத்தடி நீரை நம்பித்தான் பயிர் செய்கிறார்கள். எனவே இப்பகுதியில் அணை கட்ட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம். பரிசீலனை செய்வதாக அவர் உறுதி அளித்துள்ளார்.கடந்த மாதம் 15-ம் தேதி ஆர்.எஸ்.மங்கலம் வந்திருந்த துணை முதல்வரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். பரிசீலனை செய்வதாக அவரும் கூறியுள்ளார் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.