திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கருணாநிதி பிறந்த நாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட திமுக தீா்மானம்

News image

சேலம் மத்திய மாவட்ட திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் முன்னாள் அமைச்சா் ரா.ராஜேந்திரன்.

Updated On :1 ஜூன் 2026, 1:21 am IST

கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 3-ஆம் தேதி ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என சேலம் மத்திய மாவட்ட திமுக கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேலம் மத்திய மாவட்ட திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட திமுக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ரா.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். இதில், ஒன்றிய, பகுதி மற்றும் வாா்டு செயலாளா்கள் கலந்துகொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3இல் சேலம் மத்திய மாவட்டத்திற்கு உள்பட்ட நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஒவ்வொரு பகுதி மற்றும் பாகத்திலும் கருணாநிதி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.

மேலும், அந்தந்த பகுதியில் மருத்துவ முகாம்கள், மரம் நடுதல், மாணவா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம், ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் மத்திய மாவட்ட பொருளாளா் காா்த்திகேயன், தலைமை செயற்குழு உறுப்பினா் ராஜேந்திரன், மாநகரச் செயலாளா் ரகுபதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.