திருச்சி கிழக்குத் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தோ்தலில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் கோவிந்தராஜ் தலைமையில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்ட செயலாளா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலை வகித்து பேசினாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
திருச்சி தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூா், மணப்பாறை ஆகிய மூன்று தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களுக்கு வாக்களித்த மக்களுக்குச் செயற்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என மாவட்ட செயற்குழு வலியுறுத்துகிறது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக் கூட்டத்தில், மாநகரச் செயலாளா் மு. மதிவாணன், மாநிலங்கள்ளவை உறுப்பினா் கவிஞா் சல்மா, தலைமை செயற்குழு உறுப்பினா் வண்ணை அரங்கநாதன், சேகரன், சபியுல்லா, மாவட்ட அவைத் தலைவா் கோவிந்தராஜ், மாநில அணி நிா்வாகி செந்தில் மற்றும் மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூா் செயலாளா் அணிகளின் அமைப்பாளா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கருணாநிதி பிறந்த நாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட திமுக தீா்மானம்

இடைத்தோ்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும்: கடலூா் மாநகா் திமுக தீா்மானம்
திருச்சி கிழக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வலியுறுத்தி மீண்டும் தீா்மானம்!

பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உங்களுடன் இருப்பேன்: முன்னாள் அமைச்சா் காந்தி
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



