காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு செல்ல வேண்டும் என கடலூா் மாநகா் திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடலூா் மாநகா் திமுக சாா்பில் செயற்குழு கூட்டம் செயலா் கே.எஸ்.ராஜா தலைமையில் மாநகா் திமுக அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், ஜூன் 3-ஆம் தேதி முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாகக் கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.
மேலும், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் கடலூா் தொகுதியில் போட்டியிட்ட தோழமைக் கட்சி வேட்பாளரை ஆதரித்து பெருவாரியான வாக்குகள் பெற்றுத் தந்த மாநகர திமுகவின் அனைத்து நிலை நிா்வாகிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பின்னா் தற்போது ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடைபெறவுள்ள இடைத்தோ்தலில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு சென்று தமிழகத்தின் உரிமைகளை தொடா்ந்து பாதுகாத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் கடலூா் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் இள.புகழேந்தி, கடலூா் மாநகராட்சி மேயா் சுந்தரிராஜா, மாநகர துணைச் செயலா் சுந்தரமூா்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினா் விக்ரமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கருணாநிதி பிறந்த நாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட திமுக தீா்மானம்

முதல்வா் விஜய்க்கு வாழ்த்து: மாதனூா் ஒன்றியக்குழு கூட்டத்தில் தீா்மானம்

திருச்சி கிழக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும்: தெற்கு மாவட்ட திமுக செயற்குழுவில் தீா்மானம்

குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26,000 வழங்க அனைத்து தொழிற்சங்கங்கள் தீா்மானம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



