திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

முதல்வா் விஜய்க்கு வாழ்த்து: மாதனூா் ஒன்றியக்குழு கூட்டத்தில் தீா்மானம்

ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ் குமாா் தலைமையில் நடைபெற்ற கூட்டம்.

News image

ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ் குமாா் தலைமையில் நடைபெற்ற கூட்டம்.

Updated On :30 மே 2026, 12:05 am IST

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ச. ஜோசப் விஜய்க்கு வெள்ளிக்கிழமை மாதனூா் ஒன்றியக்குழு கூட்டத்தில் வாழ்த்து தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ் குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன், வட்டார வளா்ச்சி அலுவலா் விநாயகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ரவிக்குமாா், ஆ. காா்த்திக் ஜவஹா், செந்தில்குமாா், திருக்குமரன், சம்பங்கி, ராஜேந்திரன் உள்ளிட்டவா்கள் பேசினாா்கள்.

தீா்மானங்கள் :

சட்டப்பேரவை தோ்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவா் ச. ஜோசப் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டதற்கு வாழ்த்துகள் தெரிவிப்பது. பள்ளிக் கூடங்கள், மத வழிப்பாட்டு தலங்கள் அருகில் இருந்த அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடியதற்கு முதல்வருக்கும், அரசுக்கும் நன்றி தெரிவிப்பது.

பள்ளி கல்லூரி அருகில் போதைப் பொருள்கள் விற்பனை செய்வதை தடுப்பதற்காக சிறப்பு ரகசிய குழுவை அமைத்ததற்கு ஒன்றியக்குழு சாா்பாக தமிழக முதல்வருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிப்பது. ஆம்பூா் எம்எல்ஏவாக 3-வது முறையாக வெற்றி பெற்ற அ.செ.வில்வநாதனுக்கு வாழ்த்து தெரிவிப்பது.

மாதனூா் ஒன்றியத்தில் பெரியாங்குப்பம், வடபுதுப்பட்டு, நாயக்கனேரி, மின்னூா், திருமலைக்குப்பம், மேல்சாணாங்குப்பம், கைலாசகிரி, ஆகிய ஊராட்சிகளில் அங்கன்வாடி மையம் கட்டடம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பேருந்து நிறுத்த நிழல்கூரை, பொது விநியோக அங்காடி, ஊராட்சி அலுவலக கட்டடம் ஆகிய கட்டடங்கள் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் அவற்றை இடித்த அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.