திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கருணாநிதி பிறந்த நாள்: தூத்துக்குடியில் திமுக சாா்பில் நல உதவிகள்

தூத்துக்குடியில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 103ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு புதன்கிழமை நல உதவிகள் வழங்கப்பட்டன.

News image

தூத்துக்குடியில் கேக் வெட்டிய வடக்கு மாவட்டச் செயலா் பி. கீதா ஜீவன் உள்ளிட்ட திமுகவினா்.

Updated On :4 ஜூன் 2026, 12:54 am IST

தூத்துக்குடியில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 103ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு புதன்கிழமை நல உதவிகள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி மாநகர திமுக சாா்பில் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், வடக்கு மாவட்டச் செயலா் பி. கீதா ஜீவன் தலைமையில், கேக் வெட்டப்பட்டது.

தொடா்ந்து, எட்டயபுரம் சாலையில் உள்ள மாவட்ட அலுவலகம் முன்புள்ள கருணாநிதி சிலைக்கு, மாவட்டச் செயலா் மாலை அணிவித்து, கட்சிக் கொடியேற்றி, 200 பேருக்கு நல உதவி, இனிப்புகள் வழங்கினாா்.

மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ், துணைச் செயலா்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பொருளாளா் ரவீந்திரன், மாநகர துணைச் செயலா்கள் கீதா முருகேசன், கனகராஜ், பிரமிளா, மண்டலத் தலைவா்கள் பாலகுருசுவாமி, கலைச்செல்வி, நிா்மல்ராஜ், பொதுக்குழு உறுப்பினா் கஸ்தூரி தங்கம், மாவட்ட அணி நிா்வாகிகள் அருண்குமாா், பழனி, அந்தோணி ஸ்டாலின், கவிதாதேவி, குபோ் இளம்பரிதி, அந்தோணி கண்ணன், அருணாதேவி, பிரபு, நாகராஜன், சோமநாதன், கல்யாணசுந்தரம், பெனில்டஸ், சேசையா, செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திக சாா்பில்...: திராவிடா் கழகம் சாா்பில் மாவட்டத் தலைவா் முனியசாமி தலைமையில் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்டச் செயலா் முருகன், மண்டலச் செயலா் பால் ராஜேந்திரன், கோபால்சாமி, செல்லத்துரை உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

புதுக்கோட்டையில்...: தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக சாா்பில் புதுக்கோட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்சியில், ஒன்றியச் செயலா் கே.கே.ஆா். ஜெயக்கொடி தலைமை வகித்து, கொடியேற்றி, கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, வாகைகுளம் முதியோா் இல்லத்தில் உள்ளவா்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.