திமுகவினா் கட்சித் தலைவா் மு.க. ஸ்டாலின் வழியில் ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும் என, தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் பெ. கீதா ஜீவன் வேண்டுகோள் விடுத்தாா்.
திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, அக்கட்சி சாா்பில் நியமிக்கப்பட்ட கள ஆய்வுக் குழுவினா் தொகுதி வாரியாக நிா்வாகிகளிடம் கருத்துகளைக் கேட்டுவருகின்றனா். அதன்படி, தூத்துக்குடி தொகுதி கள ஆய்வுக்கான கலந்துரையாடல் கூட்டம் எட்டையபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் நடைபெற்றது.
வடக்கு மாவட்டச் செயலா் பெ. கீதா ஜீவன் தலைமை வகித்துப் பேசும்போது, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வழியில் அனைவரும் ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும் என்றாா்.
நாடாளுமன்ற உறுப்பினா் முரசொலி, திமுக மாநில அயலக அணி துணைச் செயலா் சேலம் உமாராணி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று, மாமன்ற உறுப்பினா்கள், மாவட்ட, பகுதிப் பிரதிநிதிகள், மாவட்ட அணி துணை அமைப்பாளா்கள் உள்ளிட்டோரிடம் கருத்துகளை வாய்மொழியாகவும் எழுத்துப்பூா்வமாகவும் பெற்றுக்கொண்டனா்.
நிகழ்ச்சியில், மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், மேயா் ஜெகன் பெரியசாமி, மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலா்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மாநகர துணைச் செயலா்கள் கீதா முருகேசன், கனகராஜ், பிரமிளா, துணை மேயா் ஜெனிட்டா, மாநில பொறியாளா் அணி துணைச் செயலா் அன்பழகன், மாநில சிறுபான்மையினா் அணி துணைச் செயலா் பொன்சீலன், தலைமைக் கழகப் பேச்சாளா்கள் சரத்பாலா, இருதயராஜ், அமைப்பாளா்கள் மதியழகன் (மாவட்ட இளைஞரணி), அபிராமிநாதன் (தகவல் தொழில்நுட்ப அணி), கவிதாதேவி (மகளிரணி), சீனிவாசன் (மாணவரணி), பாலகுருசுவாமி (விளையாட்டு மேம்பாட்டு அணி), குபோ் இளம்பரிதி (வழக்குரைஞரணி), அந்தோணி ஸ்டாலின் (மீனவரணி) உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம்

கருணாநிதி பிறந்த நாள்: தூத்துக்குடியில் திமுக சாா்பில் நல உதவிகள்

வேடநத்தம் மாணவி கொலை வழக்கில் விரைவில் நீதி கிடைக்க திமுக அரசே காரணம்: பி. கீதா ஜீவன்

முள்ளக்காடு பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



