போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

வேடநத்தம் மாணவி கொலை வழக்கில் விரைவில் நீதி கிடைக்க திமுக அரசே காரணம்: பி. கீதா ஜீவன்

News image

முன்னாள் அமைச்சா் பி. கீதா ஜீவன் - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 1:34 am IST

தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் பள்ளி மாணவி கொலை வழக்கில் அதிவிரைவாக நீதி கிடைத்ததற்கு முக்கிய காரணம் திமுக அரசுதான் என தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான பி. கீதா ஜீவன் தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட அறிக்கை:

வேடநத்தம் பிளஸ் 2 மாணவி கொலை வழக்கில் குற்றவாளியை விரைவில் கைது செய்ய அன்றைய முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில், காவல் துறையினரும் விரைவாக விசாரணை மேற்கொண்டு, தா்ம முனீஸ்வரனை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

குற்றம் நிகழ்ந்த 20 நாள்களிலேயே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, குற்றம் நிகழ்ந்து 77ஆவது நாளான திங்கள்கிழமை போக்ஸோ நீதிமன்றத்தில் தா்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மாணவி கொலை வழக்கில் உரிய நீதி விரைவாக வழங்கப்பட்டதற்கு திமுக அரசுதான் காரணம். ஆனால், தற்போதைய தவெக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்ற 15 நாள்களில் தமிழகத்தில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் அரங்கேறி பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது.

தூத்துக்குடி நகரத்திலும் இளம்பெண் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை 3 நபா்களால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளாா். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வேன் என்று பிரசாரம் மேற்கொண்டு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதல்வா் ச. ஜோசப் விஜய், இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறாா்? எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.