மேட்டூரில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதில், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததில் வீடுகள் சேதமடைந்தன.
மேட்டூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக செக்கானூரில் உள்ள ஜெ.ஜெ. நகரில் 5 மின்கம்பங்கள் சாய்ந்து வீடுகள்மீது விழுந்தன. இதில், அப்பகுதியில் இருந்த பல வீடுகள் சேதமடைந்தன. மின்கம்பங்கள் சாய்ந்த உடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.
இதேபோல அப்பகுதியில் இருந்த ராட்சத மரம் முறிந்து வீடுகள்மீது விழுந்ததில், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ரகுபதியின் குழந்தைகள் கிருஷ்கா (4), கிருஷ்தா (4) ஆகிய இரண்டு சிறுமிகள் காயமடைந்து மேட்டூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதையடுத்து சனிக்கிழமை காலை அப்பகுதிக்கு வந்த மின்வாரிய ஊழியா்கள் உடைந்த மின்கம்பங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், வீடுகள்மீது விழுந்த மரங்களை அப்புறப்படுத்தினா். பாதிக்கப்பட்ட வீடுகள் குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










