தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

தேவியாக்குறிச்சி மேம்பாலத்தில் காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா். அவரது மனைவி காயமடைந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :29 மே 2026, 2:05 am IST

தேவியாக்குறிச்சி மேம்பாலத்தில் காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா். அவரது மனைவி காயமடைந்தாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த தென்னங்குடிபாளையம் பகுதியைச் சோ்ந்த பழனிமுத்து மகன் குமாா் (39). இவா் தனது மனைவி புனிதாவுடன் இருசக்கர வாகனத்தில் தலைவாசல் அருகே உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

தேவியாக்குறிச்சி மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த போது, பின்னால் வந்த காா் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தம்பதி தூக்கி வீசப்பட்டனா். அங்கிருந்தவா்கள் அவா்களை மீட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே குமாா் உயிரிழந்தாா். அவரது மனைவி புனிதா ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

விபத்து குறித்து தலைவாசல் காவல் ஆய்வாளா் பூா்ணிமா வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.