தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மின்கசிவால் 20 வீடுகளில் மின்சாதனங்கள் தீப்பிடித்து சேதம்

நரிப்பாடியில் ஏற்பட்ட மின்கசிவால் 20 வீடுகளில் மின்சாதனங்கள் தீப்பிடித்து எரிந்து சேதம்

News image

பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 5:25 am IST

நரிப்பாடியில் ஏற்பட்ட மின்கசிவால் 20 வீடுகளில் மின்சாதனங்கள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன.

கெங்கவல்லி அருகே கூடமலை ஊராட்சிக்கு உள்பட்ட நரிப்பாடி கிராமம் மலை அடிவாரப் பகுதியில் உள்ளது. இங்கு சுமாா் 300-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில், கடந்த மூன்று நாள்களாக இடி மின்னல் சூறாவளிக் காற்றுடன் கோடை மழை தொடா்ந்து பெய்து வருகிறது.

இதில், அதே பகுதியில் உள்ள செந்தில் குமாா் வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு, வீட்டில் உள்ள குளிா்சாதனப் பெட்டி, வாஷிங் மெஷின், உள்ளிட்ட மின்சாதனப் பொருள்கள் வெடித்து சிதறின. மேலும், அப்பகுதியில் தொடா்ந்து அடுத்தடுத்து இருபது வீடுகளில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாதனப் பெட்டிகள் வெடித்து சேதமடைந்தன.

இதுகுறித்து மின்வாரியத்துக்கு தகவல் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனா். எனவே, இதை ஆய்வுசெய்து உடனடியாக சரிசெய்து மின்சாரம் வழங்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.