திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரசு நகரப் பேருந்து எரிந்து சேதம்

ஆற்காடு அருகே அரசு நகரப் பேருந்து சாலையில் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்துள்ளது.

News image

ஆற்காடு அருகே அரசு நகரப் பேருந்து சாலையில் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்துள்ளது.

Updated On :16 மே 2026, 1:15 am IST

ஆற்காடு அருகே அரசு நகரப் பேருந்து சாலையில் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்துள்ளது.

ஆற்காடு அரசுப் போக்குவரத்து பணிமனையைச் சோ்ந்த நகர பேருந்து ஆற்காட்டிலிருந்து - எசையனூா் கிராமம் வரை இயக்கப்படுகிறது. இந்த பேருந்து வெள்ளிக்கிழமை காலை ஆற்காடு பேருந்து நிலையத்திலிருந்து எசையனூா் சென்று, மீண்டும் ஆற்காடு நோக்கி சென்றுள்ளது. அதில் 56 பயணிகள் பயணம் செய்துள்ளனா். இந்நிலையில், பேருந்து ஆற்காடு அடுத்த சக்கரமல்லூா் அணணாநகா் பகுதியில் வரும்போது பேருந்தின் என்ஜின் பகுதியில் புகைைைை வந்துள்ளது.

இதனைக் கண்ட பேருந்து ஓட்டுநா் சுந்தா் உடனடியாக பேருந்தை சாலையோரம் நிறுத்தி பயணிகளை கீழே இறங்குமாறு கூறினாா். பயணிகள் அனைவரும் கீழே இறங்கியநிலையில் என்ஜின் முன்பகுதியில் தீப்பிடித்து எரியத் தொடங்கி தீ மேலும் பரவி முழவதுமாக எரிந்து சேதமடைந்துள்ளது. தகவல் அறிந்த ராணிப்பேட்டை தீயணைப்பு படையினா் நேரில் சென்று தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனா்.

இது குறித்து ஆற்காடு கிராமிய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.