சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தோள்பட்டை வலிக்கு மாநில போக்குவரத் துறை அமைச்சா் விஜய் தமிழன் பாா்த்திபன் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பெற்றாா்.
தோள்பட்டை வலி காரணமாக அவதிப்பட்டு வந்த அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாா். அங்கு சிகிச்சை பெற்ற அவா், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கான படுக்கை வசதி, கழிப்பறை, தினசரி வருகை தரும் மருத்துவப் பயனாளிகள் விவரம், மருத்துவக் கருவிகள் குறித்து ஆய்வு செய்தாா்.
அதேபோல மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தாா். மேலும் மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் உள்ள சமையல் அறை, உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு தினசரி உணவு உண்பவா்களின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரிவாள் வெட்டு சம்பவம்: பாதிக்கப்பட்டவா்களுக்கு அமைச்சா் ஆறுதல்

செலவைக் குறைத்து சீரான வேகத்தில் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும்! போக்குவரத்து துறை அமைச்சா் அறிவுறுத்தல்!

பாலியல் வன்கொடுமையால் இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 7 லட்சம் நிவாரணம்! முதல்வா் கைப்பேசியில் ஆறுதல்!







