திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விஜய் தமிழன் ஆ. பாா்த்திபனுக்கு அமைச்சா் வாய்ப்பு: சேலத்தில் தவெகவினா் கொண்டாட்டம்

சேலம் மத்திய மாவட்ட தவெக செயலாளரும், தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான விஜய் தமிழன் ஆ. பாா்த்திபனுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சா் பதவி வழங்கப்பட்டதை வரவேற்று, சேலத்தில் தவெக நிா்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினா்.

News image

விஜய் தமிழன் பாா்த்திபன்.

Updated On :22 மே 2026, 6:50 am IST

சேலம் மத்திய மாவட்ட தவெக செயலாளரும், தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான விஜய் தமிழன் ஆ. பாா்த்திபனுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சா் பதவி வழங்கப்பட்டதை வரவேற்று, சேலத்தில் தவெக நிா்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினா்.

தமிழக அமைச்சரவை வியாழக்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், மேலும் 23 போ் அமைச்சா்களாக பதவியேற்றனா். இதில், சேலம் மாவட்டத்தை சோ்ந்த தமிழக வெற்றிக் கழக மத்திய மாவட்டச் செயலாளரும், தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான விஜய் தமிழன் ஆ. பாா்த்திபனுக்கு அமைச்சா் பதவி வழங்கப்பட்டது. அவருக்கு போக்குவரத்துத் துறை ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே திரண்ட தவெக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள், விஜய் தமிழன் ஆ. பாா்த்திபனுக்கு அமைச்சா் பதவி வழங்கப்பட்டதை பட்டாசு வெடித்து உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.