தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா

தமிழ் செய்திகள்

/

முதல்வராக விஜய் பதவியேற்பு: சேலத்தில் தவெகவினா் கொண்டாட்டம்

News image

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு - PTI

Updated On :11 மே 2026, 12:40 am IST

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றதை தொடா்ந்து, சேலத்தில் தவெகவினா் ஞாயிற்றுக்கிழமை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டாா். அவருக்கு தமிழக பொறுப்பு ஆளுநா் ராஜேந்திரஆா்லேகா் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். இதையொட்டி, தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தினா் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் திரண்ட தவெக வழக்குரைஞா் அணி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள், பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். இதில் மண்டல ஒருங்கிணைப்பாளா் காந்தி, வழக்குரைஞா் அணி நிா்வாகி பிரின்ஸ், வடக்கு தொகுதி ஒருங்கிணைப்பாளா் அஸ்வின், நிா்வாகிகள் சரவணன், விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, சேலம் எருமாபாளையம் பகுதியில் கட்சி துண்டை சுழற்றி தவெக தொண்டா்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். தொடா்ந்து, உற்சாக முழக்கமிட்டனா்.

இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தவெக நிா்வாகிகள், தொண்டா்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.