தமிழ் செய்திகள்
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அரசில் முக்கிய பொறுப்பு வகித்த பலரும் தங்களின் பதவியை ராஜிநாமா செய்தனர். மேலும், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராகச் செயல்பட்டு வந்த பி.எஸ். ராமன் ராஜிநாமா செய்தார்.
இந்த நிலையில், தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயணை நியமித்து அரசாணை இன்று (மே 13) வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, விஜய் நாராயண் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் தலைமை வழக்கறிஞராகக் கடந்த 2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Vijay Narayan has been appointed as the Advocate General of the Tamil Nadu Government.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








