தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா

தமிழ் செய்திகள்

/

தமிழக அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன் ராஜிநாமா

தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடா்ந்து தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

News image

மூத்த வழக்குரைஞா் பி.எஸ்.ராமன்

Updated On :20 மணி நேரங்கள் முன்பு

தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடா்ந்து தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தமிழக அரசின் தலைமை வழக்குரைஞராக ஆா்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டாா். பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜராகி வந்த அவா், தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, கடந்த 2024-ஆம் ஆண்டு புதிய அரசு தலைமை வழக்குரைஞராக மூத்த வழக்குரைஞா் பி.எஸ்.ராமன் நியமிக்கப்பட்டாா். தமிழக அரசு சாா்பில் தொடரப்பட்ட வழக்குகளில் ஆஜராகி வந்தாா்.

இந்த நிலையில், தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், பி.எஸ்.ராமன் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளாா். அந்தக் கடிதம் ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அது ஏற்கப்பட்ட பின்னா் அரசு தலைமை வழக்குரைஞா் பதவியில் இருந்து அவா் விடுவிக்கப்படுவாா். மூத்த வழக்குரைஞா் பி.எஸ்.ராமன் கடந்த 2009 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்திலும் தலைமை வழக்குரைஞராக பதவி வகித்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.