தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா

தமிழ் செய்திகள்

/

நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிந்தார்.

News image

முதல்வர் விஜய் - டிஐபிஆர்

Updated On :15 மணி நேரங்கள் முன்பு

தமிழக வெற்றிக் கழக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான சி. ஜோசப் விஜய் முன்மொழிந்தார்.

இதனைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது ஆதரவு உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர். தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.எல்.ஏ. ராஜேஷ் குமார் உரையாற்றி வருகிறார்.

சட்டப்பேரவையில் 232 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இதனால், எனவே 116 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தால் பெரும்பான்மை கிடைத்துவிடும்.

திருச்சி கிழக்கில் விஜய் ராஜிநாமா செய்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வென்ற சீனிவாச சேதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் சட்டப்பேரவைத் தலைவராக ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஜே.சி.டி பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு மூன்று வாக்குகளைத் தவிர்த்து, தவெகவில் 105 வாக்குகள் உள்ளன.

இதனிடையே அதிமுகவில் இருந்து சி.வி. சண்முகம் தலைமையில் பிரிந்த குழுவினர் தவெகவுக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளனர்.

Summary

Vijay proposed a resolution seeking a vote of confidence

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.