தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா

தமிழ் செய்திகள்

/

தமிழக முதல்வராக ஜோசப் விஜய்: தவெகவினர் கொண்டாட்டம்

News image

கோட்டூரில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட டெல்டா விவசாய மன்றத்தினா், தவெகவினா்.

Updated On :11 மே 2026, 1:28 am IST

தமிழக முதல்வராக ச. ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக் கொண்டதை வரவேற்கும் வகையில் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சாா்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

கோட்டூா் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, அங்கு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கும், பேருந்தில் பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. டெல்டா விவசாயிகள் மன்ற தலைவா் கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், தவெக ஒன்றியச் செயலாளா் வசந்தகுமாா், கோட்டூா் ஒன்றிய செயற்குழு உறுப்பினா் வசந்தகுமாா், ஊராட்சி செயலாளா் எஸ். அருண்குமாா், கிளைச் செயலாளா் கலையரசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

நீடாமங்கலம்: தவெக தலைவா் ஜோசப் விஜய் முதல்வராக பொறுப்பேற்றதை வரவேற்கும் வகையில், நீடாமங்கலத்தில்

அக்கட்சியினா் பட்டாசுகளை வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி வெற்றி ஊா்வலம் நடத்தினா்.