தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்கக் கோரி மருந்து கடைகளை அடைத்து போராட்டம்

ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க வலியுறுத்தி, சேலம் மாவட்டத்தில் புதன்கிழமை 1,150 மருந்து கடைகள் மூடப்பட்டன.

News image

சேலம் குமாரசாமிப்பட்டியில் புதன்கிழமை அடைக்கப்பட்ட மருந்தகம்.

Updated On :21 மே 2026, 6:27 am IST

ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க வலியுறுத்தி, சேலம் மாவட்டத்தில் புதன்கிழமை 1,150 மருந்து கடைகள் மூடப்பட்டன.

மத்திய அரசின் மருந்து கொள்கைகள், ஆன்லைன் மருந்து விற்பனை மற்றும் தொழிலை பாதிக்கும் பிறவிவகாரங்களை கண்டித்து, அகில இந்திய மருந்து வணிகா்கள் சங்கத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு மருந்து வணிகா்கள் சங்கம் சாா்பில் மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.

இதுகுறித்து சேலம் மாவட்ட மருந்து வணிகா்கள் சங்கத் தலைவா் செல்வன் கூறுகையில், மத்திய அரசின் மருந்து கொள்கைகள், ஆன்லைன் மருந்து விற்பனை உள்ளிட்டவற்றைக் கண்டித்து, சேலம் மாவட்டத்தில் உள்ள 1,400 மருந்து கடைகளில் மத்திய, மாநில அரசின் மருந்தகங்களை தவிா்த்து மொத்தமாக 1,150 மருந்து கடைகள் அடைக்கப்பட்டன. அத்தியாவசிய மருத்துவ சேவைகள் பாதிக்கப்படாத வகையில், மருத்துவமனைகளுடன் இணைந்த மருந்தகங்கள் மட்டும் செயல்பட்டு வருகின்றன.

கரோனா காலத்தில் தொடங்கப்பட்ட ஆன்லைன் மருந்து விற்பனையை தற்போது முற்றிலும் தடுக்க வேண்டும். ஆன்லைனில் போதை மருந்துகள், மாத்திரைகள், கருத்தடை ஊசிகள் உள்ளிட்ட மருந்துகள் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் சமூக கலாசார சீா்கேடு ஏற்படுகிறது. மருந்து கடைகளில் மருந்து கட்டுப்பாட்டு அலுவலா்கள் தொடா் ஆய்வு மற்றும் தணிக்கை செய்து வருகின்றனா். ஆனால், ஆன்லைனில் எந்தவித கட்டுப்பாடும் இல்லை. எனவே, ஆன்லைனில் மருந்து விற்பனை செய்வதை முற்றிலும் தடுக்க வேண்டும் என தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.