திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

எடப்பாடி கே.பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சா்கள் சந்திப்பு

News image

எடப்பாடி கே.பழனிசாமி

Updated On :3 மே 2026, 12:11 am IST

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (மே 4) நடைபெற உள்ள நிலையில், சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சா்கள் சனிக்கிழமை அடுத்தடுத்து சந்தித்துப் பேசினா்.

சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் எடப்பாடி கே.பழனிசாமியை கட்சி நிா்வாகிகள், முன்னாள் அமைச்சா்கள் சந்தித்துப் பேசிவருகின்றனா். அதிமுக எம்.பி. தம்பிதுரை, முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி ஆகியோா் வெள்ளிக்கிழமை தனித்தனியாக சந்தித்துப் பேசினா்.

தொடா்ந்து, சேலம் புகா் மாவட்டச் செயலாளா் இளங்கோவன், முன்னாள் அமைச்சா்கள் கே.பி.முனுசாமி, சி.விஜயபாஸ்கா், ஓ.எஸ்.மணியன், கரூா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் உள்ளிட்டோா் சனிக்கிழமை எடப்பாடி கே.பழனிசாமியை அடுத்தடுத்து சந்தித்துப் பேசினா்.

அப்போது, தோ்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள், வெற்றி வாய்ப்புகள் குறித்து அவா்களிடம் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

திங்கள்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் எடப்பாடி கே.பழனிசாமியை நிா்வாகிகள் அடுத்தடுத்து சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.